ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றோடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே
விளக்கம்:
ஓரறிவு உயிர் என்பது உடலால் உணர்வது
இரண்டறிவு உயிர் என்பது உடல் மற்றும் வாயினால் அறிவது
மூன்றறிவு உயிர் என்பது உடல், வாய் மற்றும் மூக்கால் அறிவது
நான்கறிவு உயிர் என்பது உடல், வாய், மூக்கு, கண் இவற்றால் அறிவது
ஐந்தறிவு உயிர் என்பது உடல், வாய், மூக்கு, கண், காது இவற்றால் அறிவது
ஆறறிவு உயிர் என்பது உடல், வாய், மூக்கு, கண், காது, மனம் இவற்றால் அறிவது
இதை நேராக கண்டு உணர்ந்தவர்கள் வகை படுத்தி இருக்கிறார்கள்
No comments:
Post a Comment